கியூபெக் வீடொன்றில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனடாவின் கியூபெக் Laval நகரில் உள்ள வீடொன்றில் பதின்மவயது பிள்ளைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.
திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் அவர்கள் அந்த வீட்டுக்கு விரைந்தபோது, சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
பதின்மவயது சிறுவர்கள் உயிரிழப்பு
இதனையடுத்து, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர்களில், 13 வயது பெண் மற்றும் 11 வயது பையன் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அந்த 46 வயதுள்ள ஆண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்குத் தகுதியாகும்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை உயிரிழந்த பிள்ளைகளின் தாய் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளுக்கும் அந்த ஆணுக்கும் என்ன உறவு என்பதைத் தெரிவிக்க பொலிஸார் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.