ரஷ்யா கூலிப்படையினர் ஒருவர் கொடூர செயலால் அதிர்ச்சி! (Video)
உக்ரைனில் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து ரஷ்யா கூலிப்படையினர் ஒருவர் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கூலிப்படையானரில் ஒருவரான இகோர் மங்குஷேவ் ( Igor Mangushev)என்பவர், உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரேனிய சிப்பாயின் மண்டையோட்டை கையில் பிடித்தபடி நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, பேசிய இகோர் மங்குஷேவ் ( Igor Mangushev), உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் உயர்த்தி காண்பித்தபடி,
நாங்கள் உயிருடன் இருக்கிறோம், ஆனால் இந்த ஆள் ஏற்கனவே செத்துட்டான். அவன் நரகத்தில் எரியட்டும். அவன் அதிர்ஷ்டசாலி இல்லை. அவனுடைய மண்டையிலிருந்து ஒரு கோப்பையை உருவாக்குவோம் என்று கூறினார்.
Russian mercenary Igor Mangushev (Bereg) made a performance with the skull of a Ukrainian soldier killed near Azovstal.
— Euromaidan Press (@EuromaidanPress) August 28, 2022
Mangushev said that Russia is at war not with people but with the Ukrainian idea, so all Ukrainians must be killed @den_kazansky pic.twitter.com/RG6EAALpVP
உக்ரைன் ஒரு ரஷ்ய எதிர்ப்பு நாடு
மேலும், ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதற்கான காரணத்தை இகோர் மங்குஷேவ் ( Igor Mangushev)விளக்கினார். நாங்கள் இரத்தமும் சதையுமான உக்ரைனிய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை.

உக்ரைன் ஒரு ரஷ்ய எதிர்ப்பு நாடு என்ற எண்ணத்துடன் நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம்.., உக்ரைனை நாம் அழித்தே ஆகவேண்டும்., அந்த அன்னத்துடன் இருக்கும் ஒவ்வொரு உக்ரைனியரையும் கொல்ல வேண்டும் என்றும் மங்குஷேவ் ( Igor Mangushev) பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.