ஜெர்மனி மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் சக்சன்அனெட் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் இவ்வாறு வேலை செய்கின்றவர்கள் வேலை செய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 91 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளது.
எஸன் மாநிலத்தில் 5 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது. இந்நிலையில் பேர்லின் மாநிலத்தில் மட்டும் வருடம் ஒன்றுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் வேலைக்கு செல்லாதவர்கள் எண்ணிக்கையானது 59 ஆக தெரிய வந்திருக்கின்றது.
இவ்வாறு மது போதையில் இருப்பவர்களால் நாட்டு மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் மது போதையில் பல விபத்துக்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதாகவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.