பிரான்ஸில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!
பிரான்ஸில் வேலை தேடுவோருக்காக இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த புதிய திருத்தத்தின் படி, வேலை தேடுவோர் பட்டியலில் உதவித்தொகை பெற்றுவந்தவர்கள், அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு (24 மாதங்கள்) மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பாக நாடாளுமன்ற அமர்வில் உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்று வந்தது. இந்த நிலையில்,கருத்துக்கணிப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது பெருவாரியாக வாக்குவீதத்தில் மேற்படி ‘திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாக மீண்டும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலையில்லாதோர் பட்டியலில் 8 சதவீதமான மக்கள் பதிவு செய்து உதவித்தொகை பெற்று வருகின்றனர். அத்தோடு தீவிர பணவீக்கம் காரணமாகவும் மேற்படி திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த திருத்தம் தொடர்பாக சில எதிர்வினைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. “நாம் வரி செலுத்தியுள்ளோம். அதனால் எங்களுக்குரிய வேலை கிடைக்கும் வரை அரசு இழப்பீடு வழங்கவேண்டும்” என சிலர் கருத்திட்டுள்ளனர்.
அதேவேளை, அரசு இது தொடர்பாக மிகவும் தெளிவுடன் உள்ளது எனவும், வழங்கப்படும் உதவித்தொகையில் எந்த மாறுதல்களும் கொண்டுவரப்பட போவதில்லை.
அது வழங்கப்படும் காலம் தான் மட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.