டிரம்ப் மீதான கொலை முயற்சி ; பதவி விலகினார் இரகசிய சேவையின் பணிப்பாளர்
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் பிரசார கூட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் பின்னர் கிம் சீட்டிலை பதவி விலகுமாறு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சம்பவத்தின்போது, ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டிற்குத் தாம் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலகுவதாக இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.