பேங்கொக் அரச அலுவலகம் ஒன்றில் துப்பாக்கி சூடு; சம்பவத்தால் பெரும் பரபரப்பு
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் அவரது ஓட்டுநரும் காயமடைந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை நோந்தபுரி பாடசாலை ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்ட சோகம் தணிவதற்குள், அதே பிராந்தியத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை உடனடியாகத் தீவிரப்படுத்துமாறு தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உலோகக் கண்டறிதல் கருவிகள் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.