அமெரிக்கா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 சிறுவர்கள், ஆசிரியர் பலி
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் ஆரம்ப பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த குறித்த சிறுவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5, 8 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அத்துடன், மேலும், ஒரு சிறுவனும் ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் பாடசாலைக்குள் நுழைவதைப் பார்த்த பிரதேசவாசி ஒருவர், அவனைப் பின்தொடர்ந்து சென்று சுட்டுக் கொன்றதாகக் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.