உடற்பயிற்சிக் கூடத்தில் துப்பாக்கிச்சூடு ; கட்டடத்திற்குள்ளேயே பதுங்கிய சந்தேகநபர்
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யின் மத்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர், சம்பவம் இடம்பெற்ற கட்டடத்திற்குள் மறைந்திருப்பதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லோகன் சர்க்கிள் (Logan Circle) பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிலும் அதன் அருகாமையிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஐவரின் நிலைமை தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அருகிலுள்ள பல வீதிகள் மூடப்பட்டிருப்பதுடன், சம்பவ இடத்திற்கு அதிகளவிலான அவசரகால மீட்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.