அமெரிக்கா பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு ; 5 பேர் படுகாயம்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 5 பேர் காயமடைந்தனர்.
பல்கலைக்கழகத்தின் Quad Annexes பகுதியில், விடுதிகளுக்கு வெளியே துப்பாக்கிக் காயங்களுடன் 5 பேரை பொலிஸார் கண்டெடுத்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், வளாகத்தில் தொடர்ந்து பலத்த பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.