கனடாவில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
கனடாவின் வாட்டர்லூ கிச்சனரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாட்டர்லூ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விக்டோரியா ஸ்ட்ரீட் நார்த் மற்றும் ஃபார்ஃபார் அவென்யூவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் திட்டமிட்டு குறிப்பிட்ட நபரை இலக்காக வைத்த தாக்குதல் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து இரு ஆண்கள் தப்பி ஓடுவதை கண்டதாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிச்னர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதான இரண்டு ஆண்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.