கனடாவில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் பலியான இளைஞர்: அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தாய்
கனடாவிலிருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய், குளித்துவிட்டுத் திரும்பிவந்தபோது தன் மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்னும் இளைஞர் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழக்க, வேலி ஒன்றை இடித்துத்தள்ளிவிட்டு மரம் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளது அவரது கார்.
கார் மோதிய வேகத்தில் மரமே சாய்ந்துவிட்டதாம்.
Image Tweeted By Kal-Dosanjh
இந்த பயங்கர சம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்தான் Tarenஇன் தாய் Sarabjeet Nanara-Lal அவரிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். மகனிடம் பேசியபின், அவர் குளிக்கச் சென்றுவிட்டிருக்கிறார்.
அவர் குளித்துவிட்டுத் திரும்பிவந்தபோது விபத்து குறித்த தகவல் கிடைக்க, சற்று முன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த தன் மகன் உயிருடன் இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
தன் மகன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மழை பெய்துகொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ள Tarenஇன் தாய், அது தவிர்த்து விபத்துக்கு வேறு காரணங்கள் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.