உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்; இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு
இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் 20 வயதுடைய சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்புனர்வுக்கு உட்படுத்தியவர்கள் பெண்ணிடம் "நீ உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்" என்றும் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இன ரீதியான மோசமான தாக்குதல்
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் ஓல்ட்பரியில் உள்ள டேம் வீதி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை இன ரீதியான மோசமான தாக்குதலாகக் கருதும் பொலிஸார், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடமும் கோரியுள்ளனர்.
வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி உதவியுடன் தடயவியல் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் "வெள்ளை நிற ஆண்கள்" என்றும் அவர்களில் ஒருவர் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாகவும் மற்றொரு சந்தேக நபர் சாம்பல் நிற மேல் சட்டை அணிந்திருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது
. ஒரு சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தாக்குதலை அடுத்து சீக்கிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ள சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.