கொரோனா: சிங்கப்பூரில் ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு

covid 19 corona death singapore
By Fathima Nov 04, 2021 04:39 AM GMT
Fathima

Fathima

Report
Courtesy: BBC Tamil

சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்றும், இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது. கொரோனா நெருக்கடி தொடங்கியது முதல் அங்கு பதிவான ஆக அதிகமான அன்றாட தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

இதையடுத்து, அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக தடுப்பூசி விகிதம், பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மேலும், மிதமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது, வலுப்படுத்துவது ஆகிய உத்திகளையும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கையாண்டு வருகிறது என்றார் அவர்.

ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் இறக்கும் பட்சத்தில் அவர்களில் முதியவர்களும் முன்பே நோய்வாய்ப்பட்டவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை 'கோவிட்-19' மரண எண்ணிக்கை விகிதம் 0.2 விழுக்காடாக உள்ளது. மற்ற உலக நாடுகளில் மரண எண்ணிக்கை விகிதமானது தடுப்பூசி போடுவதற்கு முன்பு 3 விழுக்காடாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஜனில் புதுச்சேரி, அவற்றுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் மரண விகிதம் மிகக் குறைவானது என்று தெரிவித்துள்ளார். 

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 407 ஆகும்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தீவு நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் பேர் சளிக்காய்ச்சல், நிமோனியா பாதிப்பு, மற்ற சுவாசம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜனில், உரிய மருத்துவம் இல்லாததால் உயிரிழப்போர் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், உரிய மருத்துவப் பராமரிப்பும் இருந்தபடியால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றும் அரசாங்கம் இதை உறுதி செய்தது என்றும் கூறினார்.

கொரோனா தொற்று குறித்து சிங்கப்பூரர்கள் மத்தியில் அந்நாட்டு அரசு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸுடன்தான் வாழ்கிறோம் (living with Covid-19) என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

நிலைமை இதுதான் என்றபோதிலும், நாட்டின் எல்லைகளை சர்வ சாதாரணமாக திறந்துவிட இயலாது என்று குறிப்பிட்டுள்ள துணையமைச்சர் ஜனில், அவ்வாறு செய்தால் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

"தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது எனில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.

அண்மைக்காலம் வரை குறைவான மக்களுக்கு மட்டுமே தொற்றுப்பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ததன் மூலம் அவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது. இதனால் மரணமடைவோர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது.

 "தற்போது கொரோனாவுடன் வாழ்ந்து வந்தாலும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் மக்களைப் பாதுகாப்பது நீடிக்கும். எனினும் இது முழுமையான பாதுகாப்பு அல்ல.

எனவேதான், இனிவரும் நாட்களில் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "அவ்வாறு தொற்று அதிகரிக்கும்போது கொரோனா இறப்புகளும் அதிகரிக்கும்.

இதனால் சிறந்த மருத்துவ பராமரிப்பு இருப்பினும்கூட, ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகக்கூடும்," என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசும்போது சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

நிலைமை இறுதிவரை இப்படியே நீடித்துவிடாது என்றும், இதிலிருந்து விடுபடும் காலம் வரும் என்றும் குறிப்பிட்ட அவர், நிலைமை ஸ்திரமடையும் வரை மரண எண்ணிக்கையை முடிந்தவரை ஆகக்குறைவாக வைத்துக்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
மரண அறிவித்தல்

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், புத்தளம்

27 Jun, 2010
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, நீர்வேலி தெற்கு

28 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, வவுனியா

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், புலோலி மேற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

27 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US