டொரண்டோவில் பொலிஸார் மேற்கோண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்
டொரண்டோவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மாகாண பொலிஸ் கண்காணிப்பு பிரிவு (SIU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:50 மணியளவில், பாதர்ஸ்ட் தெரு மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு வாகனத்தை பொலிசார் நிறுத்தி சோதனை செய்த போது, அந்த சந்திப்பின் போது ஒரு பொலிஸ் அதிகாரி தங்களது துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய சிகிச்சை வழங்கிய பராமெடிக்கள், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.