சிவகார்த்திகேயன் மகளா இது? எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய, சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்குகிறார்.
மேலும் இயக்குநர் நொல்சன் இயக்கத்தில் இவர் நடித்த டாக்டர் திரைப்படம் கொரோனா பராவல் காலக்கட்டத்திலும் கடந்த ஆண்டு (2021) ரிலீஸ் செய்யப்பட்டு 100 கோடி வசூலை குவித்தது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் டான் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அத்துடன் இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியும் அவருடைய ஒன்பது வயது மகள் ஆராதனா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை குகன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
சமூக வலைதளத்தில் தை பொங்கல் தினத்தன்று தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு பொங்கல் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மளமளவென வளர்ந்து விட்டார்களே!’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் அடிக்கின்றனர்.