இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்
அதோடு இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து, ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறாவிட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
அதே சமயம், போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படைகளின் வெளியேற்றத்திற்கு ஈடாக, மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் சிக்கிய மீதமுள்ள 59 பணயக் கைதிகளில் தற்போது 24 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.