கனடாவில் போதைப்பொருள் அதிகளவில் உட்கொண்டதால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் நகரில் அமைந்துள்ள தங்குமிடம் ஒன்றில், போதைப்பொருள் அதிகளவு உட்கொள்ளப்பட்டதால் ஒரே நேரத்தில் 9 பேர் திடீரென உடல்நலக்குகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக சார்லோட் கவுண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே ஒரு சம்பவத்திற்காக மாகாணத்தின் மொத்த ஆம்புலன்ஸ் வளங்களும் பயன்படுத்தப்பட்டதால் அவசர கால சேவைகள் முடங்கியதாக மேயர் கவலை தெரிவித்துள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் புழக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் யாரும் தனியாக போதைப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், ஆபத்தில் உள்ளவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாராவது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டால் உடனடியாக 911 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.