பிரேஸில் விமான விபத்தில் கால்பந்து வீரர்கள் நால்வர் உட்பட ஆறுபேர் உயிரிழப்பு
பிரேஸிலின் டோகொண்டின்ஸ் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் நான்கு கால்பந்து வீரர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் உள்ள பால்மாஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு வீரர்களும் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீரர்கள் போட்டி ஒன்றில் பங்குபற்றச் சென்ற போது அங்கு நடத்தப்பட்ட கொவிட் -19 சோதனையில் அவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து அவர்கள் திரும்பி வரும்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.