கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 வயது சிறுமி
கனடாவின் டைனி டவுன்சிப்Tiny Township பகுதியில் உள்ள டென்லியா Deanlea Beach கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஒன்றாரியோ Ontario மாகாண போலீசார் (OPP) தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு பதிலளித்து அவசர சேவைகள் பிரிவினர்சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள் குழந்தையின் உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் பின்னர், ஒரிலியாவைச் Orillia நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடற்கூறு பரிசோதனை (autopsy) மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.