வெனிசுலாவில் திடீரென நிறம் மாறிய வானம்; மக்கள் அச்சம்
நில நடுக்கதால் பேரழிவை எதிர்கொண்டுள்ள வெனிசுலாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை கராகஸ் நகரில் வானம் சிவப்பு-செம்மஞ்சள் நிறமாக மாறிய சம்பவம், மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தாழ்வான நிலையில் தென்பட்ட மேகங்கள் இந்தக்காட்சியை இன்னும் விசித்திரமாகவும் மர்மமாகவும் மாற்றின.

கராகஸ் நகரிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவத் தொடங்கியதும், அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து சமூக ஊடகப் பயனர்கள் விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
சிலர் இதனை ஒரு கெட்ட சகுனமாக கருதினாலும், ஏனையவர்கள் இது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு என அறிந்துகொண்டனர்.
ஜூன் 24 அன்று வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்த நிலையில் வானம் சிவப்பு நிறமாக மாறியது மேலும் வரவிருக்கும் பேரழிவின் அறிகுறி என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.