ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய யாப்பு அறிமுகம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பிலான புதிய யாப்பு ஒன்றை சட்டமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரீ தலைமையிலான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டு இருந்தது.
இந்த அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த யாப்பு வரைவினை உருவாக்கும் பொறுப்பு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ராசிறி தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய யாப்பு குறித்த வரைவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய யாப்பினை சட்டமாக்கி அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பாத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.