டொரன்டோவில் பனிப்பொழிவினால் பயண எச்சரிக்கை
டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன் வியாழன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல் தாக்கங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டொரன்டோ பெரும்பாக பகுதியின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இந்த வார இறுதியில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் 4 முதல் 8 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பனிப்பொழிவினை அகற்றும் நடவடிக்கைகள் பொழுது எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.