கால்கரியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
கால்கரி நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள Red Carpet பகுதிக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 10:30 மணியளவில், கால்கரி பொலிஸாருக்கு 17வது அவென்யூ S.E. 6200 பகுதியிலுள்ள வீட்டில் அசம்பாவித நிலைமை குறித்து அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரை நோக்கி ஒரு ஆண் ஓடிவந்துள்ளார்.
ஒரு அதிகாரி அவரை கட்டுப்படுத்த முயன்ற நிலையில், மற்றொரு அதிகாரி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவருக்கு போலீசார் உடனடியாக முதலுதவி அளித்தாலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் போது வீட்டில் மற்றொருவர் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அல்பேர்டா குற்ற விசாரணை அமைப்பு (ASIRT) இந்த சம்பவம் தெடர்பிலான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.