இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலவவுள்ள கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை கணிசமாகக் குறையும் என்பதால், அங்கு மஞ்சள் நிற சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அபாயம் ஏற்படக்கூடும்
இந்த காலநிலை மாற்றத்தால் முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படக்கூடும் என சுகாதார முகமை கவலை தெரிவிக்கிறது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால் சமூக நலத்துறை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் அடர் மூடுபனி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதேவேளை இங்கிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்கும் வேளையில் மோசமான வானிலைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.