அவுஸ்திரேலிய சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை; Reddit வழக்கு
சிறுவர்களுக்கு சமூக ஊடக பயன் பாடு தடை விதித்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்துப் பிரபல சமூக ஊடக தளமான Reddit அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கும் புதிய சட்டத்தைக் கடந்த 10 ஆம் திகதி முதல் அமுல்படுத்தியது.

இந்நிலையில் அந்த சட்டத்தை எதிர்த்து, தற்போது Reddit நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தச் சட்டம் அவுஸ்திரேலிய அரசியலமைப்பால் குறிக்கப்பட்டுள்ள 'அரசியல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை' மீறுவதாக உள்ளது என Reddit கூறுகிறது.
மேலும் இளம் வயதினர் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதைத் தடுப்பது, எதிர்கால வாக்காளர்களின் அரசியல் புரிதலைப் பாதிக்கும் என்றும் Reddit வாதிடுகிறது