சமூக ஊடக பிரபலத்தை காணச்சென்ற ரசிகருக்கு நேரந்த கதி!
அமெரிக்காவை சேர்ந்த டீனேஜ் சிறுமி அவா மஜூரி, இவரின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவாவின் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் டிக்டாக்கை பயன்படுத்திவரும் அவாவுக்கு சமூக ஊடகங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உருவாக்கியுள்ளார். தனது 13 வயதில் சமூக ஊடகத்தில் செயல்படத் தொடங்கிய அவா மசூர், விரைவாக பிரபலமடைந்தார்.
மூன்று கணக்குகள் மூலம் கலக்கி வரும் அவா டீனேஜில் சம்பாதிக்கும் தொகை கோடிக்கணக்கில் என்றால் மலைப்பாக இருக்கிறது.
இந்நிலையில் அவா மசூரியின் வீட்டிற்கு வந்த எரிக் ரோஹன் ஜஸ்டின் என்ற 18 வயது இளைஞரை அவாவின் தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள முடியாத வெறித்தனமான ரசிகனான எரிக் ரோஹன் ஜஸ்டின் மீண்டும் அவா வீட்டிற்கு வந்தார்.
எனினும் சமூக ஊடக பிரபலத்திற்கு, அந்த பிரபலத்தன்மையே ஆபத்தாக மாறுகிறது, என்பதை ரசிகரின் உயிரிழப்பு உணர்த்துகிறது. அவாவின் ரசிகர் மொபைலில் அவாவின் ஆயிரக்கணக்கான படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால், துப்பாக்கியால் ரசிகரை சுட்டுக் கொன்ற அவாவின் தந்தைக்குக் எதிராக அவர்கள் வசிக்கும் புளோரிடாவின் 'ஸ்டாண்ட் யுவர் கிரவுண்ட்' சட்டங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது.
ஏனெனில் தங்கள் உயிருக்கு தெளிவான அச்சுறுத்தல் இருந்தால், ஊடுருவும் நபர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தையும், ஆயுதங்கலையும் பயன்படுத்த வீட்டு உரிமையாளர்களை அனுமதிக்கும் சட்டம் அங்கு அமலில் இருக்கிறது.
எனவே, டிக்டாக் பிரபலம் அவா மசூரின் தந்தைக்கு எதிராக எந்தவித சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், குறித்த விவகாரம் உலக அளவில் பெரிய அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது.