கனடிய வானில் வண்ண வண்ண எழில் கோலம்
கனடாவின் பல பகுதிகளில் வானம் எழில் கோலம் பூண்டிந்தது.
சூரியனில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் நிலைமையினால் இவ்வாறு வானம் எழில் கோலம் பூண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பூமியின் துருவப் பகுதிகளில் தென்படக்கூடிய அரோரா அல்லது துருவ ஒளிகளை இம்முறை சில நாடுகளைச் சேர்ந்த மக்களினால் பார்வையிட முடிந்தது.
கனடாவின் பல இடங்களில் வானம் வண்ணமயமான ஒளிக் கீற்றுக்களினால் ஜொலித்து மிளிர்ந்ததனை மக்கள் பார்வயைிட்டனர்.
எவ்வாறெனினும் இந்த சூரியப் புயல் காரணமாக மின்சார விநியோகத்திற்கும் ஜீ.பி.எஸ் தரவுகளுக்கும் மிகச் சிறியளவு தாக்கம் மட்டுமே ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
சூரியப் புயல்
இந்த அரோராவை வெள்ளி சனிக்கிழமை மட்டுமன்றி இன்றைய தினமும் மக்கள் சில இடங்களில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரகாசமான ஊதா, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களினால் வடக்கு வாகனம் எழில் கோலம் பூண்டு ஜொலித்திருந்தது.
இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அரோராக்களை மக்கள் பார்வயைிட்டனர்.