கனடாவில் சில மதுபானங்களின் விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
புதிய ஆண்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் சில மதுபானங்களின் விலைகள் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தில் மதுபான விற்பனையை விரிவாக்கி, நவீனப்படுத்தும் நோக்கில் முதல்வர் டக் ஃபோர்ட் அரசு கொண்டு வந்துள்ள பல மாற்றங்கள், 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், பீர், வைன், கூலர்கள் போன்றவை தற்போது சில மளிகைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில், தி பீர் ஸ்டோர் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், காலியான பாட்டில்கள் மற்றும் கேன்கள் (empties) திரும்பப் பெறும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்த விரிவாக்கம் அறிவிக்கப்பட்டபோது, LCBO (Liquor Control Board of Ontario)-விலிருந்து வாங்கும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் 10% மொத்த விலை தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.
பின்னர், அமெரிக்க வரி (U.S. tariffs) தாக்கத்திலிருந்து பார்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், இந்த தள்ளுபடி 15% ஆக தற்காலிகமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், இந்த கூடுதல் தள்ளுபடி டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இதனால், ஜனவரி 1 முதல் பல வணிகங்கள் அதிகரித்த செலவுகளை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தொழில் துறையினர் எச்சரிக்கின்றனர்.