கனடிய லொத்தர் சீட்டு வரலாற்றில் சாதனை வெற்றி: 90 மில்லியன் டாலர்களைக் குவிக்கும் அதிர்ஸ்டசாலி யார்!
கனடாவின் லொத்தர் சீட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெற்ற லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் ஒருவரைக் கோடீஸ்வரனாக்கியுள்ள மாபெரும் பரிசுத் தொகை, நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஜாக்பாட் வெற்றியாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு பல முறைகள் குலுக்கல்களில் முதற்கட்டப் பரிசு யாருக்கும் கிடைக்காமல் போனதால், பரிசுக் தொகை படிப்படியாக உயர்ந்து புதிய சாதனையான 90 மில்லியன் டொலர் என்ற உச்சத்தை எட்டியது.
செவ்வாய்க்கிழமை இரவு வரை இந்தத் தொகை யாருக்கும் செல்லாமல் அப்படியே இருந்தது. இந்த சீட்டிலுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்டாரியோ லொத்தர் மற்றும் கேமிங் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.

அதன்படி, இந்த பிரம்மாண்டமான பரிசை வென்ற லொத்தர் சீட்டு அல்பர்டா மாகாணத்தில் எங்கோ விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள் விவரம்: • 08, 15, 19, 23, 26, 28 மற்றும் 34 • போனஸ் எண்: 38 வெற்றியாளர் தனது பரிசைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், கனடாவின் லொத்தர் சீட்டு வரலாற்றில் வழங்கப்பட்டதிலேயே இதுவே மிகப்பெரிய பரிசுத் தொகையாக இருக்கும்.
லொட்டோ மேக்ஸ் விதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, அதிகபட்ச பரிசுக் தொகை 80 மில்லியனில் இருந்து 90 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், கனடாவில் வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஒன்டாரியோவின் லண்டன் நகரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இணைந்து 80.4 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்டதே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அல்பர்டா மாகாணத்தில் விற்கப்பட்ட இந்த அதிர்ஷ்ட சீட்டுக்குரியவர் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த மர்மமான கோடீஸ்வரர் யார், தனது வாழ்க்கையை மாற்றப்போகும் இந்த வரலாற்று வெற்றியைப் பெறப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி எப்போது முன்வருவார் என்ற எதிர்பார்ப்பு கனடா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.