மகனின் கடைசி ஆசை; இது என் மகள் அல்ல.. பேத்தி; க்ஷாக் கொடுத்த பிரபல நடிகை!
பிரபல ஸ்பெயின் நடிகை அனா ஒப்ரகன் குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இவர் சமீபத்தில் அனா சாண்ட்ரா என்ற பிறந்து ஒரு வாரமான குழந்தையை தத்தெடுத்தார்.
இந்த குழந்தை புளோரிடா மாகாணத்தின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தையாகும். வாடகைத் தாயான அவருக்கு பிறந்த குழந்தையை அனா ஒப்ரகன் தத்தெடுத்தது பாராட்டை பெற்ற நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
காரணம் இந்த குழந்தை தனது இறந்த மகனின் விந்தணு மூலம் உருவானது என அனா ஒப்ரகன் கூறியுள்ளார். பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு குழந்தையுடன் போஸ் கொடுத்த அவர்,
மகனின் கடைசி ஆசை
“இது என் மகள் அல்ல.. பேத்தி” என விளக்கமளித்தார். அனா ஒப்ரகனின் மகன் உயிரிழப்பு, 68 வயதான அனா ஒப்ரகனின் மகன் அலெஸ் லெகியோ தனது 27 வயதில் கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த உரையாடலின் போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசையை வெளியிட்டுள்ளார்.
அவரது ஆசையை நிறவேற்ற அலெஸ் லெக்வியோ இறப்பதற்கு முன், அவரது விந்தணுவின் மாதிரி உறைந்து நியூயார்க்கில் சேமிக்கப்பட்டது. இதற்காக அனா 3 ஆண்டுகளாக விந்தணுவை பாதுகாத்து வந்துள்ளார்.
ஸ்பெயினை பொறுத்தவரை வாடகைத்தாய் விவகாரம் சட்டவிரோதமானது என்றாலும், வெளிநாட்டில் பிறந்த குழந்தையைத் தத்தெடுப்பது சட்டபூர்வமானது ஆகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம்
அதோடு ஸ்பெயினில் இறந்த மனிதனின் விந்து, கருவூட்டலுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது அது அவர் இறந்த 12 மாதங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
அதேசமயம் அனாவின் இந்த செயல் தொடர்பில் ஸ்பெயின் அமைச்சர் ஐரீன் மான்டெரோ இந்த சம்பவம் "பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம்" என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம் இறந்த மகனின் கடைசி ஆசையை ஒரு தாயால் எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும் எனவும், இதில் பெற்றோருக்கு மட்டுமே முடிவு எடுக்க உரிமை உண்டு எனவும் அனா ஒப்ரகனுக்கு ஆதரவு குரலும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.