விரைவில் புடின் மரணமடைவார்; உறுதியாய் நிற்கும் ஜெலன்ஸ்கி

Viro
Report this article
விரைவில் புடின் மரணமடைவார் அத்துடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் புடின் மரணமடைவார்
இந்நிலையில் பாரீஸ் சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தற்போது உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உதவப்போவது இல்லை.
இது பெரிய ஆபத்தானது என நான் நினைக்கிறேன். புடின் மரணமடையும் வரை ரஷ்ய ஜனாதிபதியாக தொடர்வார். உக்ரைனுடன் அவரது நோக்கம் நின்று விடாது. மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக மோதும் வரை அவரது நோக்கம் இருக்கும்.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஒற்றுமையாக இருந்து புடினுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். ஐரோப்பா- அமெரிக்கா கூட்டணியை பார்த்து புடின் பயப்படுகிறார். அதனை பிரிக்கலாம் என நினைக்கிறார். விரைவில் அவர் மரணமடைவார்.
அத்துடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.