நியூசிலாந்தை சொற்ப ஓட்டங்களில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற தென்னாப்பிரிக்கா!
2023 ஆம் ஆண்டு ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை மேற்கொள்ள முடிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 357 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 133 ஓட்டங்களையும், குயின்டன் டி காக் 114 ஓட்டங்களையும்ம் டேவிட் மில்லர் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுத்தி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 35.30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி சார்பில் க்ளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 60 ஓட்டங்களையும் வில் யங் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுக்களையும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.