ஆபத்தான Omicron மாறுபாடு! தென் ஆபிரிக்கா மருத்துவர்கள் கூறுவது என்ன?
கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron வைரஸ் குறித்து தென் ஆப்பிரிக்கா மருத்துவர்கள் ஒரு சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. கொரோனாவை அழிக்க உலக நாடுகள் பல நடவடிக்கை எடுத்தாலும் அவை முற்றிலும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து புதிய வகை Omicron கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கடந்த மாதம் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 57க்கு மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. உருமாறிய கொரோனாவான Omicron 50 உருமாற்றங்களை கொண்டிருப்பதால் ஆபத்தானதாக இருக்கலாம் என கூறப்பட்டது.
டிசம்பர் முதல் வாரத்தில் இந்த மாகாணத்தில் புதிய தொற்று பாதிப்பு 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அவற்றில் 90 சதவீதம் Omicron பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி டாக்டர் உன்பென் பிள்ளை கூறியதாவது, கடந்த டெல்டா அலையின் போது மக்கள் சுவாச பிரச்சினையாலும் ஆக்சிஜன் அளவு குறைந்து போதல் பிரச்சினையாலும் அவதிப்பட்டனர்.
ஆனால் இப்போது Omicron தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளான காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்ற அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இதனால் Omicron பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டிலேயே தங்களை நிர்வகித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.