தென் கொரியா காட்டுத்தீயால் 15,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரை
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 15,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான, உய்சோங்கில் ஏற்பட்ட காட்டுத்தீயானது பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை மீறி வேகமாகப் பரவுவதாகத் தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களில் பரவிய காட்டுத்தீயினால் 14,694 ஹெக்டேயர் நிலப்பரப்பு அழிவடைந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததுடன் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3,300 ற்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய நிலவரப்படி, குறித்த பகுதிகளில் 88 சதவீதமான அளவு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளுக்கு தீப்பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தென் கொரிய பதில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.