விசாரணைக்கு வர மறுக்கும் தென்கொரிய அதிபர்
தென்கொரியாவில் கைதுசெய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோல் இனி எந்தவொரு விசாரணைக்கும் வரமாட்டார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
நேற்று விசாரணைக்கு வர திரு யூன் மறுத்ததை அடுத்து இன்று காலை அவர் விசாரணைக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் உத்தரவிட்டனர்.
திரு யூன் இப்படியே தொடர்ந்து ஒத்துழைக்காமல் போனால் அதிகாரிகள் அவரைப் பலவந்தமாக அழைத்துவரவேண்டிய நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லாவிட்டால் சோல் தடுப்புக் காவல் நிலையத்தில் அதிகாரிகள் திரு யூனிடம் நேரில் சென்று விசாரணை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பிலான ஆதாரங்களைத் திரு யூன் அழித்துவிடலாம் என்ற காரணத்தால் கடந்த புதன்கிழமையிலிருந்து அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.