மின்வெட்டால் ஸ்பெயின் அரசாங்கத்திற்கு ரூ.15,000 கோடி இழப்பு
மின்வெட்டால் ஸ்பெயின் அரசாங்கத்திற்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஸ்பெயினில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.
வரலாறு காணாத மின்வெட்டு
இதனால் நாட்டில் உள்ள மின்சார ரெயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உள்பட போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது. மின் வெட்டு பாதிப்பு அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகலிலும் உணரப்பட்டது.
சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஸ்பெயின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.