வெற்றியை கொண்டாட சவுதி அரேபியாவில் சிறப்பு விடுமுறை!
சவுதி அரேபியாவில் இன்று சிறப்புப் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் நேற்றைய (22 நவம்பர்) C பிரிவின் தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்ட்டினாவை வீழ்த்தியதை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன்படி அரசாங்கம், தனியார் துறை ஊழியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பொதுவிடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தரவரிசையில் 51ஆவது இடத்தில் இருக்கும் சவுதி அரேபியக் கால்பந்து அணி, உலகக் கிண்ணப் போட்டியில் இருமுறை வென்ற அர்ஜென்ட்டினாவைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சவுதி அணிக்கு சாலே அல் ஷெஹ்ரியும் (Saleh Al Shehri) சலிம் டவ்சரியும் (Salim Al Dawsari) கோல் அடித்துள்ளார்.
அர்ஜென்டினாவுக்கான ஒரே கோலை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அடித்துள்ளார்.