ஒன்ராறியோவில் அறிமுகம் செய்யப்படவுள்ள விசேட திட்டம்!
ஒன்ராறியோவில் முதலீடு செய்வோரை குடியமர்த்தும் விசேட திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாகாண அரசாங்கம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 100 குடியேறிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்க உள்ளது.
குறைந்தபட்சம் 200,000 டொலர்களை முதலீடு செய்யும் முயற்சியான்மையாளர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
சர்வதேச முயற்சியான்மையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 20 மில்லியன் டொலர்கள் மாகாணத்தில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய குடியேற்றத் திட்டம் குறித்து தொழில் அமைச்சர் Monte McNaughton தகவல்களை வெளியிட்டுள்ளார்.