18 பேரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த அணில்!
18 பேரை கடித்ததால் அணில் ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்துவைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என பிரதேசவாசிகள் பெயரிட்டுள்ளனர்.
இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில்,
ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். எனினும் அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் என்னை கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரைப் குறித்து மற்றொரு நபர் தெரிவித்துள்ளதாவது, “இந்த, ஸ்ட்ரைப், என்னை கடித்து விட்டு என் நண்பர்களையும் கடித்தது. மேலும் பலரை கடித்திருக்கிறது. எனக்கு வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு பயமாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
அதேவேளை ஸ்ட்ரைப்-ஆல் 18 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த அணிலை கால்நடை மருத்துவர் பிடித்தார். இதனையடுத்து அணிலை , வனப்பகுதியில் விடுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, ஸ்ட்ரைப்-ஐ கருணை கொலை செய்துள்ளனர்.
அதேவேளை சாம்பல் நிற அணில்கள் ஆக்ரோஷமானவை என பிரிட்டன் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கம், கூறியிருக்கிறது.