பரபரப்பில் இலங்கை; 8 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கப்போவது யார்!
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை மட்டுமல்லாது சர்வதேசமுமே யார் ஜனாதிபதியாக தேர்ந்தெடூக்கப்படபோகின்றர் என்பதை அறிந்துகொள்ள ஆவலில் உள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும். அதேவேளை வாக்கு சீட்டை எம்.பிக்கள் படமெடுத்தால் அவர்களுக்கு ஏழாண்டுகள்வரை நாடாளுமன்றம்வர தடை விதிக்கப்படலாம்.
 
இந்நிலையில் வேட்பாளர்களில் டலஸ் அழகப்பெருமவுக்கான ஆதரவு வலுத்துள்ளதுடன் 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பிந்திய தகவல்கள் ரணிலுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதி ஜனாதிபதி ரணில் கூறியிருந்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        