இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் புதிய பிரதமராக தற்போதைய தற்காலிக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி 137 ஆசனங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு இன்றையதினம் (18-11-2024) நடந்து வருகிறது.
கடல்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். அதிபர் முன்னிலையில் அவருக்கு தமிழில் பதவிப்பிரமாணம் நடந்தது.
இலங்கை வெளிவிவகார துறை அமைச்சராக விஜித் ஹேரத் பதவியேற்றார். மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார்.