இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு கோட்டாபய அதிபர் பதவியிலிருந்து விலகினர்.
இதனையடுத்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.