பிரபல சாம்பியன் கடத்தப்பட்டு கொடூர தாக்குதல்; உறவினர்கள் பகீர் தகவல்!
இலங்கையின் பிரபல குத்துச்சண்டை சாம்பியன் தினுஷா லக்ஷன் இனம்தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
தினுஷ லக்ஷான் கும்பலொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி உள்ள தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, வைத்தியசாலை சந்திக்கு நபரொருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும், அங்கு இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த கும்பல் அவரை கொடூரமான முறையில் தாக்கி சென்றுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் தாக்குதல்
மோட்டார் சைக்கிளொன்று தொபாதுகாப்புப் படையினர் டர்பில் விபரம் அறிய வேண்டும் என தனது மகனை அழைத்து இவ்வாறு தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கையடக்கத் தொலைபேசி வேலை செய்யாத காரணத்தினால், உறவினர்கள், நண்பர்கள்,தேடியுள்ளனர்.
இதன் போது கடுமையான வெட்டுக்காயங்களுடன் தினுஷ லக்ஷான் தாக்கப்பட்டு, ஹந்தான பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , பாதுகாப்புப் படையினர் சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் தாயார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.