இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பரில்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் அரசுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவும், தினேஷ் குணவர்தன பிரதமராகவும் பதவியேற்றனர்.
இவ்வாறான நிலையில் ரணிலின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.
இதன்படி, இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17-ம் திகதி தொடங்கி ஒக்டோபர் மாதம் 16ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ரணில் மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது அமைச்சரவையில்இல நீதியமைச்சராக இருக்கும் விஜேயதாச ராஜபஷ போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.