இலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை
சுமார் 38 நாடுகளுக்கு புதிய வீசா முறைமையை இலங்கை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
உடன் அமலுக்கு வரும் வகையில் இந்த புதிய வீசா இன்றி இலங்கைக்கு பயணம் செய்யக்க கூடிய முறைமை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஆலி சபரி இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளார்.
வன் சொப் (one chop) இலவச விசா நடைமுறையை உடன் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் காணப்படும் வன் சொப் வீசா முறைமையை இலங்கையிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டில் ஒரு அதிகாரப்பூர்வ முத்திரையை இட்டு இந்த வீசா நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா கரும பீடங்களில் நிலவிவரும் நெரிசல் நிலையை குறைப்பதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன் சொப் வீசா நடைமுறை இலங்கையில் உடனடியாக அமல்படுத்தப்படுவதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் சுற்றுலா விவகார ஆலோசகருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான பூரண அதிகாரத்தை அமைச்சரவை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வீசா பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த வன் சொப் வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.