அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சியான தகவல்கள் !

Australia Police People Hospital Suicide Srilankan Huntingdale
By Independent Writer Feb 01, 2022 01:46 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார். மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் உயிரிழந்த இலங்கையர்  தொடர்பில்  வெளிவந்த அதிர்ச்சியான தகவல்கள் ! | Sri Lankan Committed Suicide Australia Come Out

இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குணத்திலகா குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பூக்கள் மற்றும் பொம்மைகளை அவர்களின் வீட்டருகே வைத்தார்கள்.

இதனிடையில் குணத்திலகா திருமண வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்ற குணத்திலகா Curtin பல்கலைக்கழகத்தில் படித்த போது உடன் படித்த அந்நாட்டு பெண்ணுடன் காதலில் விழுந்தார்.

பின்னர் கடந்த 2016ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குணத்திலகாவின் மனைவி மற்றும் மாமியார் இருவருமே சட்ட துறை தொடர்பான பணியில் இருந்தனர். குணத்திலகாவை தனது மகள் திருமணம் செய்வதற்கு அவரின் தாயார் ஆரம்பம் முதலேயே தயக்கம் காட்டி வந்தார் என கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் உயிரிழந்த இலங்கையர்  தொடர்பில்  வெளிவந்த அதிர்ச்சியான தகவல்கள் ! | Sri Lankan Committed Suicide Australia Come Out

இந்த சூழலில் தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த 2020 - 2021 காலக்கட்டத்தில் குணத்திலகாவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் மனைவியும், மாமியாரும் சட்ட துறையில் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ஜெயிப்பது என்பது குணத்திலகாவுக்கு கடினமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அவர் தனது நண்பர்களிடமும் கூறியிருக்கிறார். இதையடுத்து குணத்திலகாவும் அவர் மனைவியும் பிரிவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் ஒருபக்கம் நடந்துள்ளன.

மனரீதியான பிரச்சினை கொண்ட குணத்திலகாவுடன் வாழ முடியாது என்ற காரணத்தையும் அவர் மனைவி கூறியதாக தெரிகிறது. இதற்கு அவரின் தாயாரும் பக்கபலமாக இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் உயிரிழந்த இலங்கையர்  தொடர்பில்  வெளிவந்த அதிர்ச்சியான தகவல்கள் ! | Sri Lankan Committed Suicide Australia Come Out

இதனை தொடர்ந்தே தனது பிள்ளைகளுடன் தனியாக வசிக்க தொடங்கியிருக்கிறார் குணத்திலகா. இது குறித்து குணத்திலகா நண்பர்கள் கூறுகையில்,

குணத்திலகா தனது மனைவியையும், பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடைய மனைவி தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை மற்றும் மாமியாரும் இதை தான் செய்தார்.

இந்த பிரச்சனைக்கு மத்தியில் இந்திகா குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவரது மனச்சோர்வு அதிகமாகிக்கொண்டே இருந்த சூழலில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட இரண்டு அழகான குழந்தைகளின் வாழ்க்கை இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் அழிந்துவிட்டது எனவும் அவர்கள்  வேதனை தெரிவித்துள்ளனர்.   

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US