துருக்கி நிலநடுக்கம்; இலங்கை குடும்பத்தின் நெகிழவைத்த செயல்!
44 ஆயிரத்திற்க்கும் அதிகமானவர்களை பலியெடுத்துள்ள துருக்கி பூகம்பம் உலகவாழ் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இநிலையில் துருக்கியில் திட்டமுகாமையாளராக பணியாற்றும் அங்கு 8 வருடங்கள் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தில்ஹானி சந்திரகுமார் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவமுன்வந்துள்ளார்.
அவர் தனது கணவருடன் இணைந்து சல்வேசன் ஆர்மி மூலமாக பாதிக்கப்பட்ட துருக்கி மக்களிற்கு உதவி வழங்கி அவர்களை பராமரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கை
அத்துடன் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒன்றரை மாத குழந்தையும் காணப்படுகின்றது, அவர் அந்த குழந்தை உட்பட குறிப்பிட்ட குடும்பத்திற்கு தனது மேல்மாடி வீட்டில் இடமளித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் பேரழிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தை பொறுப்பேற்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் மனோநிலையை அவருக்கு வழங்கியுள்ளது.
அந்த குடும்பத்தின் சேமித்த சிறிய அளவு பணத்தை தவிர அந்த குடும்பம் எதுவுமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த குடும்பத்தினர் விரும்பும்வரை அவர்களை பராமரிப்பதற்கு டிலினி முன்வந்துளதுடன், நான் இதனை அதிக செலவுபிடிக்கும் நடவடிக்கையாக கருதவில்லை,என கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.