ஜெர்மனியில் நண்பர்களுடன் சென்ற இலங்கை மாணவர் மாயம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்ட லசித் யசோதா க்ரூஸ் புள்ளே என்ற மாணவனே , இவர் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நண்பர்களுடன் சென்றபோது துயரம்
குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் மற்றும் சிம்பாப்வேயைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற போதே இவர் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது.
இவர் காணாமல் போனமை மர்மமானது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவனின் சகோதரி திருமதி சாமோடி மிலேஷானி தெரிவித்தார்.
தனது இளைய சகோதரர் காணாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு கோரி வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்யவுள்ளதாக மிலேஷானி மேலும் தெரிவித்துள்ளார்.