அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ் குடும்பஸ்தரின் விபரீத முடிவு! பறிபோன உயிர்
அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் திருகோணமலையை சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டு போர் காரணமாக அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.
அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார். எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்தாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.