ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குள்ளான இலங்கையர்
செங்கடலுக்கு அருகிலுள்ள ஏடின் கடற்பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குள்ளான சரக்கு கப்பலில் இலங்கையர் ஒருவர் தீக்காயங்களுக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் பணியாற்றிய மற்றுமொரு இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்திய கடற்படையினரின் தலையீட்டுடன், இதுவரை 21 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஜிபூட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலுக்கு அருகிலுள்ள ஏடின் கடற்பிராந்தியத்தில் வைத்து சரக்கு கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது